Advertisment

ஒரு மாத ஆண் குழந்தை திடீர் மரணம்! - போலீஸார் விசாரணை!  

one month old baby passes away near erode police investigation

ஈரோடு மாவட்டம், சென்னிமலை கொளத்துப்பாளையம் சாலை சென்னியாண்டவர் நகரைச்சேர்ந்தவர் ஸ்ரீதர்(25). இவருக்குத்திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி ஸ்ரீதரின் மனைவிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை900 கிராம் எடையுடன் பிறந்ததால், தொடர்ந்து 22 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதையடுத்து கடந்த 24ம் தேதி குழந்தையை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஸ்ரீதர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், கடந்த 4ம் தேதி இரவு 11 மணியளவில் ஸ்ரீதரின் மனைவி குழந்தைக்குத்தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்தார். மறுநாளான 5ம் தேதி காலை குழந்தையைப் பார்த்தபோது எவ்வித அசைவும்மூச்சின்றியும் இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், அவரது மனைவியுடன் குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத்தெரிவித்தனர். இதைக் கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

police Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe