Published on 07/08/2022 | Edited on 07/08/2022

சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே வழிகாட்டிப் பலகை விழுந்து இருவர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே சாலையில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வழிகாட்டிப் பலகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டிப்பலகை இரு புறமுமிருந்த கம்பங்களோடு திடீரென பெயர்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்தில் அரசுப்பேருந்து ஒன்றும் சேதமடைந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.