சந்தையில் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க, கடை உரிமையாளர்கள் அவ்வப்போதுதள்ளுபடியை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தனது கடை திறப்பு விழாவில் 1 கிலோ மீன் 1 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்தியுள்ளார் வியாபாரி ஒருவர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதிதாக மீன்கடை திறப்பு விழா இன்று (10/11/2019) நடைப்பெற்றது. திறப்பு விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தனது கடைக்கு முதலில் வரும் 100 நபர்களுக்கு 1 கிலோ மீன் ரூ 1 க்கு விற்பனை எனவும், அடுத்த 100 நபர்களுக்கு 100 டிபன் பாக்ஸ் இலவசம் என விளம்பரம் செய்யப்பட, காலை 06.00 மணிக்கு முன் பிருந்தே அசைவ பிரியர்கள் கடை முன் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.