one hospitalized near trichy police investigation

திருச்சி மணப்பாறை வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது நண்பர் தமிழ்ச்செல்வன். அவருக்கும் அருகாமையில் வசிக்கும் லோகநாதன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்செல்வனுக்கு ஆதரவாக ராஜேந்திரனும் லோகநாதனுக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரும் செயல்பட்டு வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் வையம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரி முன்பு நின்று கொண்டிருந்த ராஜேந்திரனுக்கும் ஷாஜகானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர். இதில் ஷாஜகான் அங்கிருந்த சோடா பாட்டிலைஎடுத்து ராஜேந்திரனை தாக்கினார். இதில் அவரது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisment