Skip to main content

மியான்மரில் இருந்து சென்னை திரும்ப இருந்த மீனவர்களில் ஒருவர் மாயம்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

One of the fishermen who was returning to Chennai from Myanmar was missing

 

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் 55 நாட்களுக்குப் பிறகு மியான்மார் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அவர்களை தாயகம் அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளும் மாநில அரசு மற்றும் மீன்வளத்துறை எடுத்துவந்த நிலையில், ஒருவர் மாயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 5 மாதங்களாக நீடிக்கும் ஊரடங்கு உத்தரவினால், காசிமேட்டில் குறைந்தளவு விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 50 படகுகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். அந்த நேரத்தில் சென்னை காசிமேடு நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் திருவெற்றியூர் குப்பம், திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், லட்சுமணன், சிவகுமார், பாபு உள்ளிட்ட 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஜூலை 23 இல் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 7 நாட்களில் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், பல நாட்களாகியும் மீனவர்கள் கரைக்குத் திரும்பாததால் உறவினர்கள் அச்சமடைந்தனர். 

 

இது தொடர்பாக பாதிக்கப்பட குடும்பங்கள் அமைச்சரிடம் புகார் அளித்தனர். மேலும், சாலை மறியல் முற்றுகைப் போராட்டம் ஆகியவை நடத்தியக் காரணத்தால், மாயமான மீனவர்களை ஹெலிகாப்டர் மற்றும் கடற்படை மூலமாக தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

இந்நிலையில், இரவு ரோந்து சென்ற மியான்மார் கடற்படையினர் விசைப்படகுடன் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை மீட்டு விசாரணை செய்தனர். விசாரணையில், தமிழக மீணவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்திய மீன்வளத்துறை அமைச்சர், அவர்களை அழைத்துவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மியான்மர் நாட்டில், மோசமான வானிலை நிலவியது. சற்றே கடல் சீற்றமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஒன்பது மீனவர்களில் இரண்டு பேர் (ரகு மற்றும் பாபு) தாங்கள் வந்த விசைப்படகு பாதுகாப்பாக உள்ளதா என்று பார்ப்பதற்காக மியான்மர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருடன் விசைப்படகில் சென்று தங்களின் விசைப்படகைப் பார்த்தனர். 

 

Ad

 

மேலும், நிறுத்திவைக்கப்பட்ட விசைப்படகில் இருந்து பாபு மற்றும் ரகு ஆகியோர் கயிற்றைக் கட்டுவதற்காக முயற்சி செய்தபோது தவறி விழுந்துள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மியான்மர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் ஈடுபட்டனர். இதில் ரகுவை மட்டும் மீட்டனர். ஆனால் பாபு மாயமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து மியான்மர் கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி மீனவர்கள் தீவிரமாக பாபுவை தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.