Published on 30/07/2021 | Edited on 30/07/2021

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட வாரம் ஒரு நாள் விடுப்பு தரவேண்டும். காவலர்களின் பிறந்தநாள், திருமண நாள் அன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கப்படவேண்டும். வார விடுமுறை தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கு மிக நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும். காவலர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்.பி தவறாமல் செயல்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை வாயிலாக டிஜிபி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.