Advertisment

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள், பணி நிரந்தரம் கோரி மற்றும் திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதியைநிறைவேற்றக் கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே ஒரு நாள் அடையாளஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாநிலத்தலைவர் சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார்.