ADVERTISEMENT

''ஒரு நாள் அரசியலுக்கு வரேன் என்கிறார்... மறுநாள் பால்கனில இருந்து வரலன்னு கைய காமிச்சிட்டு போயிடுறாரு''- வைகோ பேட்டி!

03:15 PM Aug 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் டெல்லி சென்றிருந்த ரஜினிகாந்த், அங்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்த நிலையில், தமிழக ஆளுநரைச் சந்தித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்' ஆளுநரிடம் அரசியல் பற்றியும் பேசினேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பேசுகையில்,'ஜிஎஸ்டி வாரியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல்,கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக எல்லாப்பொருட்களின் விலையும் அதிகரிததுள்ளது. இந்த விலை அதிகரிப்பு நடுத்தர மக்களையும், அடித்தட்டு மக்களையும் அதிகம் பாதிக்கிறது. இதனால் மோடி அரசு மீது மக்களுக்கு நாளுக்கு நாள் வெறுப்பு வளர்ந்து வருகிறது' என்றார். அப்பொழுது ரஜினிகாந்த் ஆளுநர் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ,''ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியல, யாருக்கும் புரியல. ஏனென்றால் ஒரு நாள் அரசியலுக்கு வரேன் என்கிறார். மறுநாள் உறுப்பினர் சேர்க்க சொல்லிட்டேன்னு சொல்றாரு. எல்லாரையும் வர சொல்றாரு. தமிழ்நாடு முழுக்க வராங்க. வந்த பின்னாடி நான் அரசியலுக்கு வரலன்னு பால்கனில இருந்து கைய காமிச்சிட்டு போயிடுறாரு. அவர சீரியஸாகவே எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT