Advertisment

ஆந்திராவிலிருந்து கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சா... துப்பாக்கி முனையில் துரத்திப்பிடித்த தனிப்படை போலீசார்!!

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு முறைகேடாக கோடி ரூபாய்மதிப்புடையகஞ்சாவைகடத்திச் சென்ற காரை போலீசார் விரட்டி பிடித்து துப்பாக்கி முனையில் கைது செய்து, கஞ்சாவையும் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

police

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட் ஆசீர்வாதம் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

Advertisment

இந்நிலையில் பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்கின்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் தனிப்படை போலீசார். அப்போதுசந்தேகத்திற்கு இடமாக வந்தசிவப்பு நிற ஹோண்டா சிட்டி காரைசோதனை செய்ய தனிப்படை போலீசார்நிறுத்தி உள்ளனர். ஆனால் அந்த காரானது போலீசார் அருகே வந்தவுடன் நிற்பது போல வந்து நிற்காமல்போக்கு காட்டி இடத்தை விட்டு வேகமாக பறந்தது.

police

இதையடுத்து அந்த காரை தனிப்படை போலீசார் ஸ்கார்பியோ காரில் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பின்பக்கம் பலமாக மோதினர் ஆனாலும் அந்த கார் நிற்காமல் இன்னும் அதிவேகமாக செல்ல, எப்படியாவது காரைநிறுத்தியாக வேண்டும் என துப்பாக்கியால் காரை நோக்கி சுட்டனர். இதனால் அதிர்ந்து போன அந்த காரின் ஓட்டுனர் சடாரென காரை நிறுத்தினார். இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் அந்த காரை முழுவதுமாக சோதனையிட்டனர். சோதனையில் காரில் கோடிக்கணக்கில் மதிப்புடைய கஞ்சாபொட்டலங்கள் காரின் டிக்கியிலும்,பின்பக்க சீட்டில் அடிப்பகுதியிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

police

காரை ஓட்டி வந்தவர்மற்றும் ஒருவர் எனஇருவரும்கைது செய்யப்பட்டனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இருவரிடமும் தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எருமைகுளம் கிராமத்தைச் சேர்ந்த படம் முனியசாமி என்பதும், மற்றொருவர் அதே பகுதியில் உள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழிவிடும் முருகன் என்பதும் தெரியவந்தது.

police

ஆந்திராவிலிருந்து கஞ்சாகடத்தி வந்து இந்த இருவர்கள் மீதும்ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த இருவரும் மங்களமேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஸாமிட்டல்டிஎஸ்பி தேவராஜன் தலைமையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை சாதாரணமாக காரில் கடத்தி வந்த இந்த கும்பலை மதுரை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்திருப்பது கஞ்சா கடத்தல் காரர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

kanja madurai police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe