Skip to main content

கொள்ளையர்கள் விட்டுச்சென்ற காரில் சிக்கியது ஒரு கோடி ஹவாலா பணமா? - போலீசார் தீவிர விசாரணை!

Published on 01/01/2021 | Edited on 01/01/2021

 

One crore hawala money stuck in the car left by the robbers? - Police serious investigation!

 

கோவை அருகே கொள்ளையர்கள் நடுரோட்டில் விட்டுச் சென்ற காரில் ரூ.1 கோடி சிக்கியது. அது ஹவாலா பணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்சலாம் (50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தனது காரில் கோவை வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் சம்சுதீன்(42) என்பவர் ஓட்டி வந்தார். அவர்களது கார் கோவை நவக்கரை அருகே வந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல், அப்துல்சலாமின் காரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்தனர்.

 

மேலும் அந்த கும்பல் அப்துல்சலாமையும், அவரது டிரைவரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு காரையும், அவர்களது 2 செல்ஃபோன்களையும் பறித்துச் சென்றனர்.

 

இந்த கொள்ளைச்  சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் கோவை-சிறுவாணி ரோடு மாதம்பட்டி அருகே அப்துல்சலாமின் கார் கேட்பாரற்று நின்றது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று காரை மீட்டனர். அதேபோல் கோவை பேரூர் பச்சாம்பாளையம் சாலையோரம் கிடந்த 2 செல்ஃபோன்களையும் போலீசார் கைப்பற்றினர்.

 

police case

 

இதற்கிடையே கைப்பற்றிய கார் கே.ஜி.சாவடி போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு அப்துல்சலாமிடம் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  அப்போது அவர் பணம் தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். அப்போது காரின் பின் இருக்கைக்கு கீழே, அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

மேலும் அந்த பணத்திற்கு அப்துல்சலாமிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அது ஹவாலா பணமாக இருக்கலாம் எனக் கருதி அதைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தக் கொள்ளைச் சம்பவம் நாடகமா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை போலீஸ் சூப்பிரண்ட் அருளரசு நேரடியாக விசாரித்து வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கல்வராயன் மலையில் ட்ரோன் விட்டு சோதனை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024

 

  kallakurichi incident; Drone test on kalvarayan Hill

அண்மையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரமருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையில் திடீர்  ஆய்வு நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தார்கள் குறிப்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் இங்கு நியமிக்கப்பட்டிருந்தார். சட்ட ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளை முடுக்கிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேரில் சென்று கல்வராயன் மலைப் பகுதிக்கு சென்றுள்ள ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கல்வராயன் மலை, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்திய நிலையில் சேராப்பட்டு பகுதியில் டிரோன்களை பார்க்க விட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இனி கல்வராயன் மலைப்பகுதியில் இது போன்ற கள்ளச்சாராயம் காய்ச்சும் நடவடிக்கைகளோ அல்லது வேறு தவறான நடவடிக்கைகளோ நிகழாத வண்ணம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

கடல் அலையில் சிக்கி ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
2 Chennai IT employees lose their live in Parangipet sea wave


சிதம்பரம், பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் கூடுவாஞ்சேரியில் உள்ள ஜோ.கோ கார்ப்பரேசன் ஐடி கம்பெனியில் பணிபுரியும் கணினி பொறியாளர்கள் ஷாம் சுந்தர் (26) கோகுல் பிரசாத் (26) பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர்கள் கூடுவாஞ்சேரியில் தங்கி பணி செய்து வருகிறார்கள்.  

இவர்களுடன் 2 ஆண் மற்றும் 2  பெண் நண்பர்கள் என மொத்தம் 6 பேர் பாண்டிச்சேரியில் இருந்து கார் மூலம் பிச்சாவரம் சுற்றுலா தளத்திற்கு சென்று படகு சவாரி செய்துவிட்டு பின்னர் சாமியார் பேட்டை கடற்கரைக்கு குளிக்க வந்துள்ளனர்.அப்போது ஷாம் சுந்தர் மற்றும் கோகுல பிரசாத் ஆகியோர் கடல் அலையில் சிக்கி அடித்து சென்றுள்ளனர். இதனைப் பார்த்தவர்கள் அவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.