one arrested in cm case

Advertisment

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னுடைய சொத்துப் பிரச்சனை காரணமாக போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு உடனே இணைப்பைத்துண்டித்துவிட்டார். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரணையை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் நடத்திய போலீசார் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பக்கமுள்ள தாட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்கிற விபரம் தெரிய வந்திருக்கிறது.

அந்தோணிராஜ் நெல்லை மாவட்டம் அம்பை ரயில் நிலையத்தில் டிராக் மேனாகப் பணிபுரிந்துவருபவர். இவரது தந்தையான ஜெபஸ்டியான் இரண்டு மாதங்களுக்கு முன்பு இடவிவகாரம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்து முதல்வர் தனிப் பிரிவிற்கு அந்தோணி ராஜ் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்திருக்கிறது.

இதன் பின் ஆழ்வார்குறிச்சி போலீசார் அந்தோணிராஜைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி வந்த சென்னை போலீசார் விசாரணைக்காக அந்தோணிராஜை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.