Advertisment

சென்னை தொழிலதிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது

ரகத

சென்னை நெற்குன்றம் சின்மயா நகரில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் ஏதோ ஒன்று கருப்பு பைகளில் கட்டப்பட்டு மிதப்பதாகத் துப்புரவுத் தொழிலாளர்கள் காவலர்களுக்கு நேற்று தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்த காவலர்கள் பைகளில் கட்டப்பட்டு வாய்களில் துணிவைத்து கட்டி இருந்தது தொழிலதிபரின் சடலம் என கண்டுபிடித்தனர். கொலை செய்யப்பட்டவர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 62 வயதான பாஸ்கர் என்பதும் தன்னுடைய மகனுடன் இணைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

Advertisment

காவல்துறையினர் விசாரித்ததில் பாஸ்கரின் ஏடிஎம் அட்டையிலிருந்து இரு முறை ரூ.10,000 எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. அவரது சடலம் இருந்த இடத்திற்கு அருகே அவரது காரும் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கணேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

arrest police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe