பெரியோர்களால் நாள் நட்சத்திரம் பார்த்து அனைத்து பொருத்தமும் பார்த்து லட்சக்கணக்கான நகைகளை வரதட்சனையாக கொடுத்து, கார் கொடுத்து, ஒன்னரை மாத கர்ப்பிணியான மனைவியை சைக்கோ கணவன் கழுத்தறுத்த சம்பவம் திருச்சியில் பெரிய பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி பார்வதி புரத்தை சேர்ந்தவர் கமல்நாத் இவருக்கு வயது 46 இன்ஜினியர் சிங்கப்பூரில் சில காலம் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புள்ளம்பாடி சார்ந்த ஜீவிதா வயது 26 என்ற பெண்ணுக்கு கடந்த 2019 ஜூன் 6ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.இதற்காக சிங்கப்பூரிலிருந்து வந்த கமல்நாத் அதன்பிறகு அங்கு செல்லவில்லை.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ஜீவிதா ஒன்றரை மாத கர்ப்பமாக இருந்தால் இந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் சும்மா இருந்ததால் இதுகுறித்து இன்று காலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அந்த தகராறில் கமல்நாத் மனைவியை அடித்து உதைத்தார்.
பின்பு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவள் கழுத்தை அறுத்தார். இதில் ஜீவிதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் பின்பு கமல்நாத் தனது இடது கை நரம்பை அறுத்து கொண்டால் கையில் ரத்தம் சொட்டசொட்ட வீட்டிலிருந்து வெளியே வந்தவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .
இதுபற்றி தகவல் அறிந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கையில் ஏற்பட்ட காயத்துடன் கமல்நாத் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமா அல்லது வரதட்சணை கொடுமை அல்லது கர்ப்பமாயிருக்கும் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு துணிந்தது என்ன என்பது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஜீவிதா குடும்பத்தினர் நம்மிடம்...
இங்கு காலையில் என் மகள் என்னிடம் எப்போதும்போல நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தார் அப்போது மணி எட்டு ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் முசிறி காவல் நிலையத்தில் இருந்து என் மகளை கமல்நாத் கழுத்தறுத்து கொன்று விட்டார் என்று தகவல் சொன்னது எங்களால் நம்ப முடியவில்லை ஏனென்றால்
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
என் மகள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக 80 பவுன் நகையும் ஒரு காரும் வாங்கி கொடுத்தும் அவள் ஒன்னரை மாத கர்ப்பிணியாக இருந்தும் சைக்கோ தனமாக என் மகளை கழுத்தை அறுத்து கொன்ற கமல்நாத் மீது ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும், ''காரும், 80 பவுனும் போட்டு கல்யாணம் பண்ணி வைத்தோம் பாவிப்பையன்இப்படி பண்ணிட்டான்'' கதறிய குடுப்பத்தினர்கொலை செய்தது யார் யார் விசாரிக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்திருப்பதாக தெரிவித்தனர்.
கமல்நாத் அப்பா வழக்கறிஞர் என்பதால் அவருடைய யோசனையில் கமல்நாத் தன் மனைவி கர்ப்பிணியை கொலை செய்ததும் வழக்கில் தப்பிப்பதற்காக தானும் கையில் அறுத்துக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். என்கிற ரீதியில் விசாரணையும் நடைபெற்று கொண்டிருக்கிறது.