வாக்கு இயந்திரங்களில் வரிசையை மாற்றி அமைத்து வாக்குப்பதிவு நடத்தியதை கண்டுபிடித்த அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்சுமார் ஒன்றரைமணி நேரம் வாக்குப்பதிவுநிறுத்தப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பள்ளப்பட்டி, செளந்தராபுரம் வாக்குச்சாவடி எண் 195 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1, 2, 3, 4 என்ற வரிசைப்படி அமைக்காமல் அதனை மாற்றி நான்கு மூன்று, இரண்டு, ஒன்று என்ற வரிசைப்படி அமைத்து தவறுதலாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

Advertisment

polling

polling

Advertisment

இதனைக் கண்டுபிடித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்து வாக்குப்பதிவு நிறுத்தினார்கள்.

இது தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திர பொறியாளருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த அவர் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றத்தை மீண்டும் சரி செய்து கொடுத்தபின் வாக்குப்பதிவு மீண்டும் இப்போது துவங்கியிருக்கிறது.

இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரவசத்தை சரி செய்வதற்காக துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.