பொள்ளாச்சியில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்!

கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. இதில் ஒரு பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு தமிழ்நாடே அதிர்ச்சியில் உறைந்தது. இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

pollachi issues

மேலும் இந்த வழக்கை டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றினார். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து, காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது ரீயாசுதீன்( 21), முகமது யூசுப் ( 21), வசந்தகுமார் (19), கமர்தீன் (19), முகமது சபீர் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் வந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.

arrested case incident police pollachi
இதையும் படியுங்கள்
Subscribe