Advertisment

மீண்டும் அசத்திய மாரியப்பன் தங்கவேலு

 Once again the uncanny Mariyappan Thangavelu

Advertisment

ஜப்பானில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இப்போ போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன் 1.88 மீட்டர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சொந்த ஊரில் செய்தியாளர்களைச் சந்தித்த மாரியப்பன் தங்கவேலுவின் தாயார் பேசுகையில், ''ரொம்ப விளையாட்டில் ஆர்வமாக இருப்பான். கால் கொஞ்சம் மாற்றுத்திறனாளிதான். பள்ளிக்கூடம் படிக்கும் போதிலிருந்தே ஆர்வமாக விளையாடுவான். முதலில் தங்கப்பதக்கம் வாங்கிவிட்டான். இரண்டாவது வெள்ளி பதக்கம் வாங்கி விட்டான் என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தான். நான் விளையாடி விட்டு வருகிறேன் என வைராக்கியமாக சொல்லிவிட்டு அவனுடைய ஃபேமிலிய, குழந்தைய, எங்க ஃபேமிலிய எதையும் கண்டுக்காம விளையாடி என் பையன் ஜெயித்து விட்டான். நல்லா இருக்கிறான். எங்களுக்கு சந்தோசம். குழந்தையை கூட பார்க்காமல் ஆர்வமாக விளையாண்டுட்டு வரவேண்டும் என சொல்லி விளையாடி வென்றுள்ளான். முதலமைச்சருக்கும் வாழ்த்துக்கள், சத்தியமூர்த்தி சாருக்கு வாழ்த்துக்கள், மோடிக்கும் வாழ்த்துக்கள்'' என்றார்.

Japan sports
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe