Advertisment

மீண்டும் கரோனா இல்லாத மாவட்டமானது கிருஷ்ணகிரி 

சென்னையில் நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு கரோனா இல்லைஎன்பது தெரியவந்துள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஒருவருக்கு கரோனாஇருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய அவர் கிருஷ்ணகிரி வந்த நிலையில் அவர்,தன்னை தானேதனிமைப்படுத்தி கொண்டிருந்தார். மேலும் அவரே முன்வந்து கரோனாபரிசோதனை செய்து கொண்டார் .அதில் அவருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டது.

Advertisment

 Once again, the district without corona is Krishnagiri

அதனைஅடுத்து மீண்டும் அவருக்கு இரண்டாவது கட்டமாக ரத்த மாதிரி அனுப்பப்பட்டு சென்னையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அவருக்கு கரோனா இல்லைஎன்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கரோனாபட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் சுழியம் என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் ஒருவருக்கு கரோனா இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் அவருக்கும்கரோனாஇல்லை என தெரிவிக்கப்பட்டதால் மீண்டும் கிருஷ்ணகிரி கரோனாபாதிக்கப்படாத மாவட்டமாக தொடர்கிறது.

Chennai krishnakiri corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe