Advertisment

அத்தப்பூ கோலப்போட்டி & விளையாட்டு போட்டி... குமரியில் களைகட்டிய ஓணம்!

கேரளா மக்களின் பிரதான பண்டிகையான ஒணம் நேற்று பெரும் விமர்சையாக கேரளாவில் கொண்டாடபட்டது. கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் ஒணம் கொண்டாடபடவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டும் பருவமழை வயநாடு மாவட்டத்தை சுக்கு நூராக்கியது. இதனால் ஒணம் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கொண்டாடவில்லை. ஆனால் மற்ற 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஒணம் பண்டிகையை பெரும் விமர்சையாக கொண்டாடினார்கள்.

Advertisment

onam

காலையில் புத்தாடை உடுத்து கோவிலுக்கு சென்ற மக்கள் அதன்பிறகு வீடுகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஒணப்பாட்டு பாடி ஆடி மகிழ்ந்தனர். அத்தப்பூ கோலத்தின் 10 ஆவது நாளான நேற்று அத்தபூக்கோலத்தில் திருவிளக்கேற்றி அவர்களின் நம்பிக்கையாக மாவேலி மன்னனை வரவேற்று பூஜைகள் செய்தனர். முதல் திருவோண நாளான நேற்று மதியம் 11 கூட்டு பொறியல் வகைகளுடன் மதியம் உணவு உட்கொண்ட மக்கள் இரவு கேரளா அரசு மற்றும் கலைஞர்கள் சார்பில் ஒவ்வொரு பகுதியில் நடத்தப்பட்ட கலைநிகழ்சிகளை கண்டு கழித்தனர். மேலும் திருவனந்தபுரத்தில் வெள்ளையம்பலத்தில் இருந்து கிழக்கே கோட்டை வரை சாலையின் இரு பக்கங்களின் அலங்காரிக்கப்பட்ட மின் விளக்குகளை மக்கள் குடும்பம் குடும்பங்களாக வந்து பார்த்து ரசித்து சென்றனர்.

இதே போல் அரசு அலுவலகங்கள் எல்லாம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணை கவரும் விதமாக உள்ளது. பல்வேறு பகுதியில் இரவு நடந்த கலை நிகழ்ச்சிகளை குடும்பத்தினருடன் மக்கள் கண்டு கழித்தனர். குமரி மாவட்டதிலும் மக்கள் ஒணம் பண்டிகையையொட்டி காலையில் இருந்தே அத்தப்பூ கோலப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தியதோடு பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள். இரவு பல்வேறு ஊர்களில் ஒணம் திருவிழா ஆடல் பாடல் என்று களை கட்டியது.

Kanyakumari Kerala onam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe