Omni van burnt on road; Luckily 4 people survived

Advertisment

சிதம்பரம் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் இன்று (23/7/2023) ஆம்னி வேன் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த வேனில் திடீர்தீப்பிடித்துஎரிந்தது. வேனிலிருந்த நான்கு பேர் தீப்பற்றியதை அறிந்து வேனை விட்டு இறங்கி ஓடினார்கள். அப்போது 2 பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

Advertisment

பின்னர் இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீப்பற்றி எரிந்த வேன் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து விசாரணையில் மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாத சாமி என்பவரின் வேன் என்பதும், இது எரிபொருள் கசிவால் எரிந்துள்ளது எனவும் தெரியவந்தது. அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.