Omni car caught fire in the middle of the road

சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னிகார் ஒன்று திடீரென நடு சாலையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் பைபாஸ் சாலைகளில் இன்று காலை பயணித்துக் கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. கட்டிட ஒப்பந்ததாரர் ரங்கநாதன் என்பவர் இன்று காலை உறவினர் இறப்பிற்காக மேச்சேரிக்கு சென்றுள்ளார். அப்பொழுது திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அருகே சென்றபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது.

Advertisment

உடனடியாக காரை நிறுத்திய ரங்கநாதன் கீழே இறங்கினார். அதற்குள் காரின் முன் பக்கத்தில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வந்தது. தீயணைப்பு வீரர்கள் நீரைப் பீச்சி அடித்து தீயை அணைக்கமுற்பட்டனர். இருப்பினும் காரி முன்பக்கம் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்து கிளம்பிய புகையால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த சூரமங்கலம் போலீசார் கார் எரிந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.