Advertisment

நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது!

fh

Advertisment

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக நாளை முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

ரயில் மற்றும் விமான நிலையம் செல்வதற்குத் தனியார் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படும், மேலும் இணையதளம் மூலம் புக் செய்யப்பட்டு வாகனங்கள் பயன்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருவோருக்காக ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் ஆட்டோ, கால் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை என்ன கட்டுப்பாடுகள் இருந்ததோ அது அப்படியே தொடரும் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனால் ஞாயிறு அன்று வழக்கம்போல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை முழுவதும் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

bus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe