/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/omni_0.jpg)
தமிழகத்தில் 6 மாதத்துக்குப் பிறகு ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 50% இருக்கைகளுடன் வழக்கமான கட்டணத்துடன் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது 500 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பயணிகளின் வருகையைப் பொறுத்து சேவையை அதிகரிக்க பேருந்து உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் ஆம்னி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)