Omni bus owners asked for time; Sudden announcement

வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க அவகாசம் நீட்டித்து தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் நாளை முதல் வெளி மாநிலபதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது வரும் திங்கட்கிழமை வரை அதற்கான அனுமதி வழங்கி இருக்கிறார்கள். எனவே திங்கட்கிழமை வரை தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திங்கட்கிழமைக்கு பிறகு வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கினால் போக்குவரத்து துறையினுடைய விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.