Advertisment

லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய கொடூர விபத்து; 2 பேர் பலி

Omni bus collides with a lorry in Trichy

Advertisment

சென்னையிலிருந்து கம்பம் நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே போல தர்மபுரியிலிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு லாரி பேருந்தின் முன்பாக சென்றது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே சென்ற போது சென்னையிலிருந்து கம்பம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து முன்னே சென்ற தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் சந்திரன் மற்றும் பேருந்தில் பயணித்த பழனியம்மாள் என்கிற மூதாட்டி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

accident trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe