Omni bus collides with ambulance, 3 passed away

Advertisment

விபத்தில் சிக்கியவர்களை மீட்டபோது ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதிவிபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.

பெரம்பலூர்,சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜோசப் பள்ளி அருகே கார் மீது டிராக்டர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை மீட்டபோது, அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து ஆம்புலன்சில் மோதியது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன், காரில் பயணம் செய்த குப்புசாமி கவிப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரும் வேறு ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்துஉயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.