Skip to main content

சாம்பள்ளி அருகே ஆம்னி பேருந்து விபத்து; மீட்புப் பணிகள் தீவிரம்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

 Omni bus accident near Puduchampally; rescue operation intensified

 

மேட்டூர் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முழு பேருந்தும் எரிந்து நாசமானது. பேருந்தில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கோயம்புத்தூரிலிருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மேட்டூர் அடுத்துள்ள சாம்பள்ளி பகுதியில் வந்தபோது பேருந்தின் முன் பகுதியில் கரும்புகை வெளியானது. இதனைக் கண்ட ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை வெளியேறும்படி அறிவுறுத்தினார். உடனடியாகப் பயணிகள் கீழே இறங்கத் தொடங்கினர். அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்புறம் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

 

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கருமலைக்கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது. பேருந்தில் இருந்த 43 பயணிகளும் அவசர வழி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்து உயிர் பிழைத்தனர். இந்த விபத்தில் தீயில் சிக்கி 6 பெண்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்னி பேருந்து எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் சாம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர்; திருமண ஊர்வலத்தில் கொடூரச் செயல்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Atrocity in wedding procession in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம் மதோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாமா கவுதம் (24). இந்த இளைஞருக்கு அம்மாவட்டத்தில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. அதன்படி, துலாபூர் பகதூரன் என்ற கிராமத்தில் அவர்கள் இருவருக்கும் திருமண விழா நடைபெற்றது.

அந்த விழாவையொட்டி, மணமகன் சுதாமா கவுதம், குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அங்கு வந்தவர்கள், இளைஞர் சுதாமா கவுதம் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆசிட் ஊற்றியதில், சுதாமா கவுதமும், அவருடன் குதிரை வண்டியில் அமர்ந்திருந்த 2 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மணமகன் தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், சுதாமா மீது ஆசிட் ஊற்றி தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, தப்பிச் சென்ற 3 நபர்களையும் போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 3 பேரில் ஒருவரான சச்சின் பிண்ட் (23) என்ற வாலிபர், சுதாமாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த சச்சின், இந்தத் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மணமகன் மீது ஆசிட் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கள்ளச்சாராய மரணம்; நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
kallakurichi fake liquor incidentl Actor Vijay consoled

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்ல கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்துள்ள விஜய், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.