இன்றைய அளவில் உலக நாடுகளையும், உலக மக்களையும் அச்சுறுத்துவதோடு மக்களின் உறக்கத்தையும் பறித்த ஒரே சம்பவம் கொரோனா. கண்ணுக்குப் புலப்படாத இந்த வைரஸ், எதன் மூலம் மனிதர்களைப் பற்றுகிறது என்பதில் கூடதெளிவான அறிவிப்பில்லை. அதன்காரணமாக பலிகளும் உயர்வதோடு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கூடுவதால் மக்கள் பதற்றத்தின் டெசிபல் எகிறியுள்ளது.

Advertisment

ominous corona ... face mask price hike...

வெளியே செல்லும் மக்கள் ஜனரஞ்சகமுள்ள இடங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் வெளியே சென்று விட்டு வருபவர்கள் கை கால் முகங்களைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். மக்கள் முன்னெச்சரிக்கையாக முகத்திற்கு மாஸ்க் அணிய வேண்டும் என்றும்பாதுகாப்பை அரசு அறிவிக்கிறது. டிமாண்ட் காரணமாக இதற்கு முன் சாதாரணமாகக் கிடைத்த மருத்துவ குணம் கொண்ட முக கவசமான மாஸ்க்கின் விலை, நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு தற்போது விலை விண்ணுக்குப் போய் விட்டது.

Advertisment

இது குறித்து தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரின் மருத்துவர்கள் தங்களை அடையாளப்படுத்த விரும்பாமல் சொல்லுவதோ.,

இதற்கு முன்னர் சாதாரணமாக ஒரு மாஸ்க்கின் விலை 3.50 மற்றும் வரி சேர்த்து 4.00 ரூபாய் என்றிருந்தது. ஒரு பேக்கேஜ் 100 எண்ணிக்கைகளைக் கொண்ட மாஸ்க்கின் விலை 400 என்றிருந்தது கொரானா பீதி காரணமாக தற்போது ஒரு பேக்கேஜ் 400லிருந்து இரண்டாயிரம் ரூபாயாகப் பறந்து விட்டது. அதற்கும் தட்டுப்பாடு. இதனால், நோயாளிகளைப் பரிசோதிக்கவும், ஆபரேஷன் போன்ற முக்கியச் சிகிச்சைகளுக்குத் தேவையான மாஸ்க்குகள் கிடைக்காமல் நாங்கள் திண்டாட வேண்டியுள்ளது.

Advertisment

ominous corona ... face mask price hike...

தற்போதைய சூழலில் சாதாரண மக்களின் இந்த மாஸ்க் பயன்பாட்டு விஷயத்தில் அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவசர வலியுறுத்தல் விடுக்கிறார்கள்.

மேலும் விசாரித்ததில் முக கவசமான, மாஸ்க் செட்கள் கம்பெனியிலிருந்து வர வேண்டியுள்ளது என்கிறார்களாம் ஸ்டாக்கிஸ்ட்கள். ஆனால் அதே வேளையில் அவைகள் பதுக்கப்படுவதாகவும் தகவலுமிருக்கிறது என்கிறார்கள் பெயர் சொல்லவிரும்பாத மருத்துவர்கள்.

மக்களின் நலன் பொருட்டு மாஸ்க் விலை விஷயத்தில் அரசு உடனே தலையிட வேண்டுமென்பது மருத்துவர்கள் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களும் விடும் அவசரகால கோரிக்கையாகியிருக்கிறது.