Advertisment

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு 'ஒமிக்ரான்'

 'Omigron' for 11 more in Tamil Nadu

உலகை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் கரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் வேகமாக அதிகரித்துவருகிறது. தற்போது நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐகடந்துள்ளது. தற்போதுவரை நாட்டில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதில் 186பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களில் 6 பேர்சென்னை கிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றுஒமிக்ரான்தொற்று கண்டறியப்பட்டவர்களில் 4பேர் ஆபத்து நிறைந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்7பேர் சென்னையையும், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரைச் சேர்ந்த தலா ஒருவருக்கும்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Tamilnadu OMICRON
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe