/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MK32332.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16/07/2021) முகாம் அலுவலகத்தில், ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ள உள்ள தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பவானி தேவி (வாள் சண்டை), சத்தியன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), நேத்ரா குமணன் (பாய்மரப் படகுப்போட்டி), கணபதி (பாய்மரப் படகுப்போட்டி), வருண் (பாய்மரப் படகுப்போட்டி), ஆரோக்கிய ராஜீவ் ( தொடர் ஓட்டம்), நாகநாதன் பாண்டி (தொடர் ஓட்டம்), தனலட்சுமி (தொடர் ஓட்டம்), ரேவதி வீரமணி (தொடர் ஓட்டம்), சுபா வெங்கடேசன் (தொடர் ஓட்டம்) மற்றும் மாரியப்பன் தங்கவேலு (மாற்றுத் திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல்) ஆகியோருடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வின் போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "விளையாட்டில் திறமையுள்ள மாணவ, மாணவியருக்கு பொருளாதாரத் தடை இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும். விளையாட்டு வீரர்கள் பயிற்சிப் பெற தேவையானப் பொருள், உணவு, பயிற்சிகள் வழங்கப்படுவது உறுதி. விளையாட்டுத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் அரசாக தி.மு.க. ஆட்சி இருக்கும்" எனத் தெரிவித்தார்.
"வெற்றி நமதாகட்டும் என்று வீரர்கள் வெற்றி வாகை சூடி, பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்துகள். வீரர்களுக்கும் தேவைப்படும் உதவிகளுக்கும் உத்தரவாதம் அளித்தேன்" என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)