மது அருந்த பணம் இல்லாததால் 80 வயது மூதாட்டியை கொன்று காதுகளை அறுத்து தோடு திருடப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ளது திருவேடகம் கிராமம். அந்த பகுதியில் வாழ்ந்து வந்த சோனை என்ற நபர் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மது வாங்கப் பணம் இல்லாமல் சுற்றிவந்த சோனை அந்த பகுதியில் வசித்து வந்த பாப்பாத்தி (80) என்ற மூதாட்டியை கொன்றதோடு காதை அறுத்து தோடுகளை திருடிச் சென்ற சென்றுள்ளார். இந்நிலையில் சோழவந்தான் காவல்துறையினர் சோனையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மது போதைக்காக 80 வயது மூதாட்டி காதறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.