/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai3_9.jpg)
தனது மகன் அருகில் இருந்தால் சற்று புத்துணர்ச்சியுடன் இருப்பேன் என்று 81 வயது மூதாட்டி மகனுக்கு பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் 20 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கருமேனியம்மாள் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தனது மகன் பழனிக்கு ஒரு மாதம் பரோல் வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தன் வாழ்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மூதாட்டி, சிறிது காலம் மகனுடன் இருக்க விரும்புவதால் 20 நாட்கள் மட்டும் சாதாரண பரோல் வழங்குவதாகத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)