Advertisment

தாய்க்கு நேர்ந்த பரிதாபம்; வீட்டிற்கு வந்த மகளுக்கு அதிர்ச்சி!

old woman who lived alone near Appakudal  passed away

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அடுத்துள்ள குப்பாண்டம்பாளையம், கரட்டூர் மேடு பகுதியை சேர்ந்தவர் செம்பாயி (75). கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது கணவர் இறந்து விட்டார். இரண்டு மகள்களும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓசூரில் வசித்து வரும் 2-வது மகள் ஜெயலட்சுமி (54) கடந்த 22ம் தேதி தாயார் செம்பாயியுடன் போனில் பேசியுள்ளார். மீண்டும் அவர் நேற்று காலையில் தொடர்பு கொண்ட,போது செம்பாயியின் போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

Advertisment

இதையடுத்து ஜெயலட்சுமி, அவரது அக்காள் தேவகிக்கு தகவல் தெரிவித்து செம்பாயியின் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன் பேரில் தேவகி சென்று பார்த்தபோது வீட்டினுள் துர்நாற்றம் வீசி உள்ளது. அவர் உள்ளே சென்று பார்த்த போது கட்டிலுக்கு அருகில், கீழே விழுந்த நிலையில் செம்பாயி இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

Advertisment

இது குறித்த புகாரின் பேரில், ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe