/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/am656.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்திலுள்ள 11- வது வார்டுக்கு உட்பட்ட விளங்கி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 87 வயதான மூதாட்டி சாயாதேவி. இவர் கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, அவர்கள் இவரை பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர். சக்கர நாற்காலியில் அவரை அமர வைத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் வாக்குச்சாவடி மையமான சிதம்பரம் நகராட்சி பழைய கட்டிடத்திற்கு அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்துபாதுகாப்பாக மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார். இவர் 11- வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சி.கே.ராஜனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)