நொடிப் பொழுதில் நேர்ந்த துயரம்; அரசு பேருந்து மோதி மூதாட்டி பலி!

 old woman was crushed to a government bus

ஈரோடு மாவட்டம் வெங்கநாயக்கன்பாளையம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (60). இன்று காலை 6.30 மணியளவில் சாவித்திரி சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு வந்து பூக்களை வாங்கிக் கொண்டு இருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து ஈரோடு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

பேருந்து சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்குள் வருவதற்காக நுழைவு வாயிலில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக பூ வாங்கி கொண்டு வந்த சாவித்திரி மீது மோதியது. இதில் பேருந்தின் வலதுபுற முன் சக்கரம் சாவித்திரி மீது ஏறி இறங்கியது. இதில் சாவித்திரிக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

police
இதையும் படியுங்கள்
Subscribe