Advertisment

கணவரின் படத்திற்கு பூ போட்டு வணங்கிய மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

old woman passed away erode

ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த காளிங்கராயன் பாளையம்கவுந்தப்பாடி ரோடு பாரதி நகரைச் சேர்ந்தவர் அன்னை பவானி (64). மகளுடன் வசித்து வருகிறார். மகள் வீட்டின் மேற்தளத்திலும் அன்னை பவானி கீழ்த்தளத்திலும்வசித்து வந்தனர். அன்னை பவானியின் கணவர் பூபதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். கணவரின் புகைப்படத்திற்கு தினமும் அன்னை பவானி விளக்கேற்றி பூ வைத்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் சம்பவத்தன்றும் வழக்கம் போல் காலை அன்னை பவானி கணவரின் புகைப்படத்திற்கு விளக்கு ஏற்றி பூ வைத்து வழிபட்டார். விளக்கேற்றிவிட்டு பூ போட்டு கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பட்டு உடல் முழுவதும் பரவத் தொடங்கியது. வேதனையால் அன்னை பவானி அலறினார்.

Advertisment

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அன்னை பவானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe