Old woman lost their life  in Erode.

Advertisment

ஈரோடு, அசோக் நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி வெங்கடத்தம்மாள் (73). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால், வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என உறவினர்களிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் வெங்கடத்தம்மாள் சோர்வாக காணப்பட்டார். அதுகுறித்து, அவரது மகன் தட்சிணாமூர்த்தி கேட்டபோது, தான் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் கழிப்பறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திராவகத்தை குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி தாய் வெங்கடத்தம்மாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த வெங்கடத்தம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.