ஈரோடு மாவட்டம் அந்தியூர் கொமராயனூரை சேர்ந்த வீரப்பன் மனைவி வேலம்மாள்(69). விவசாயி. இவர், கடந்த சில வருடங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், வேலம்மாள் கடந்த 20-ம் தேதி வீட்டில் விஷம் மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வேலம்மாள் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.