மூதாட்டி கொலை; கவரிங்கிற்காக பறிபோன உயிர் 

nn

நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கவரிங் நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நாரையூரணி கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி. மூதாட்டியான லட்சுமி பேரன் பேத்தியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலை வந்து பார்த்த பொழுது மூதாட்டி லட்சுமி மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக மூதாட்டியை பரிசோதித்ததில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுஉயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் மூதாட்டி கழுத்தில் இருந்த நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. நகையை திருடுவதற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த நகைகள் கவரிங் என்பது தெரிய வந்துள்ளது. தங்கநகை என கவரிங் நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம்நாரையூரணி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

police Ramanathapuram
இதையும் படியுங்கள்
Subscribe