Advertisment

உடைகள் களையப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்த மூதாட்டி- போலீசார் விசாரணை

Old woman found with her clothes removed - Police investigation

திருப்பத்தூர் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுஆடைகள் களையப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்துள்ள ராஜபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சந்திராபாய் (73 வயது) இவர் ஊரில் தனியாக ஒதுக்குப்புறமாக இருக்கும் அவருடைய மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சந்திராபாய் தலையில் ரத்த காயத்துடன் ஆடைகள் களையப்பட நிலையில் சடலமாக கிடந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி ஸ்ரேயா குப்தா சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டார். ஆடைகள் களையப்பட்டு மூதாட்டியின் உடல் கிடந்ததால் ஒருவேளை அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்காயம் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

incident police thirupathur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe