Old woman case police arrested old man

Advertisment

ஓமலூர் அருகே, மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, காவல்துறையில் சிக்காமல் நான்கு மாதங்களாகப் போக்கு காட்டி வந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், அருகே உள்ள தொளசம்பட்டியைச் சேர்ந்தவர் காமாட்சி. 70 வயது மூதாட்டியான இவருடைய கணவர் பல ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார். இதனால் அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய வீடு அருகே பெரியாம்பட்டியைச் சேர்ந்த ராமன் (65) என்பவர் வசிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே விவசாய நிலத்தில் ஆடு மேய்ந்தது தொடர்பாகத்தகராறு இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி இரவு, மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த ராமன், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மூதாட்டி சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த 22 ஆயிரம் ரூபாயையும் திருடிச் சென்றார்.பாலியல் அத்துமீறலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை மீட்ட உறவினர்கள், அவரை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். தலைமறைவான ராமனை காவல்துறையினர் தேடி வந்தனர்.

Advertisment

இந்நிலையில், செப். 4ம் தேதி அவர் உறவினர் ஒருவரைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர். நான்கு மாதங்களாக காவல்துறைக்குத்தண்ணீர் காட்டி வந்த பாலியல் குற்றவாளி பிடிபட்டதை அடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.