Skip to main content

''பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்...''-தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பேட்டி!

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

 '' The old pension scheme should be implemented ... '' - Interview with the special chairman of the Tamil Nadu Civil Servants Union!

 

சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை அழைத்து நிர்வாக ரீதியாக கலந்துரையாடி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக  நியாயவிலை கடையை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தை வரவேற்கிறோம். அதேவேளையில் மாவட்ட ஆட்சியர்கள் வழங்கப்படும் அரிசி போன்ற பொருட்கள் ஆலையிலிருந்து குடோன்களுக்கு வரும்போதும்,  குடோன்களில் இருந்து  நியாயவிலை கடைகளுக்கு வரும்போதும் ஆய்வு செய்வது சிறந்ததாகும்.  இதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பிக்க வேண்டும். இந்த மூன்று இடங்களிலும் ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் சரியாக இருக்கும். மேல்மட்டத்திலிருந்து தொடங்கக்கூடிய குறைகளை அனுமதித்துவிட்டு கீழ்மட்டத்தில் உள்ள பணியாளர்களை மட்டும் ஆய்வு செய்வதை ஏற்க இயலாது.

 

அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியாரின் நிர்வாகத்திலிருந்தபோது தேவைக்கு அதிகமான பணியாளர்கள், ஆசிரியர்கள் நியமனம் செய்தார்கள். அதன் விளைவாக நிதிச் சிக்கல் ஏற்பட்டு அரசே பல்கலைக்கழகத்தை அரசுடமை ஆக்கியது.  அதில் பணியாற்றி வந்த ஆசிரியர்களையும், பணியாளர்களையும் தேவைக்கு அதிகமாக இருந்தவர்களை இதர அரசு கல்லூரிகளில் அரசு துறைகளில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

பணிமாற்றம் செய்யப்பட்ட பணியாளர்கள் 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் எந்தெந்தத் துறைகளில் பணியாளர்கள், ஆசிரியர்கள், பணியாற்றுகிறார்களோ அதே துறைகளில் பணி நிரந்தரம் செய்து பதவி உயர்வுகளையும் மற்ற சலுகைகளும் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்பினால் விருப்பத்தின் பெயரில் அவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பலாம்.

 

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் அந்த மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார். 

 

மேலும் ''வரும் 17ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி பணியாளர்கள் இணைந்து முடிவு செய்து அதன் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை அளித்து வலியுறுத்த உள்ளோம்'' என்றார். இவருடன் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.

 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.