தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர். இதில், அனைத்து அரசு அலுவலங்களிலும் ஏற்கனவே உள்ள சம்பளம் வழங்கும் நடைமுறையையே தொடர வேண்டும். அரசு அலுவலகங்களில் பல நேரங்களில் சர்வர் சரியாக வேலை செய்யாததால், பணி நேரம் இரவு வரை நீடிக்கிறது. மேலும் மாதந்தோறும் சம்பளம் சரியான தேதியில் வராமல் இருக்கிறது. என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். இதற்கு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் தலைவர் மு.அன்பரசு தலைமை தாங்கினார். இதில் மாநில, மாவட்டம், வட்டம் என ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பிறகு அவர்களின் கோரிக்கையை கருவூல கணக்குத்துறை ஆணையரிடம் மனுவாக அளித்தனர்.
பழைய சம்பளம் வழங்கும் முறையையே கடைபிடிக்க வேண்டும் - தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம்
Advertisment