Advertisment

தண்ணீர் பாய்ச்ச சென்ற முதியவர்; எரிந்த நிலையில் சடலமாக மீட்பு 

 old man who went to water the garden in Karur was found passed away

கரூர் அருகே தென்னந்தோப்பில் முதியவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியைச்சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் (72) மற்றும் காத்தவராயன் (68). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் விடுவதாகக் கூறிவிட்டு கருப்பண்ணன் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் கருப்பண்ணனை தேடி உறவினர்கள் சென்று பார்த்த போது முதியவர் கருப்பண்ணன் எரிந்து கரிக்கட்டையான நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடப் பிரச்சனை சம்பந்தமாக கருப்பண்ணனை அவரது தம்பி காத்தவராயன் தான் எரித்துக் கொலை செய்திருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், அவரை கைது செய்யும் வரை பிரேதத்தை எடுக்கக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

police karur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe