விசாரணை கைதியாக இருந்த முதியவர் சிறையில் மரணம்!

The old man who was an undertrial passedaway in prison!

தமிழகத்தில்போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், தீவிரமாக போதைப்பொருள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தினசரி சிறப்புப் படையினர் புகையிலைப் பொருட்களை பிடித்து வருகின்றனர். இதேபோல நேற்று முன்தினம் பொன்னமராவதி அருகே காரையூரில் சில கடைகளில் திடீர் சோதனை செய்தபோது, சுமார் 50 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சின்னத்துரை உள்பட 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை சிறையில் விசாரணை கைதியாக இருந்த சின்னத்துரைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்ட வந்தபோது சின்னத்துரை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். புகையிலைப் பொருள் விற்றதாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் சின்னத்துரை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police Prison Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe