ஈரோடு அக்ரஹார வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், டவுன் போலீஸ் எஸ்ஐ சசிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் ஈரோடு சொக்கலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்த சண்முகம் (76) என்பதும், அவரது உடமைகளை சோதனை செய்தபோது வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சண்முகத்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 131 லாட்டரி சீட்டுக்கள், ரொக்கம் ரூ.1,570, ஒரு ஸ்மார்ட் போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.