/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/885_67.jpg)
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச்சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(68). இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் டைப்பிங் இன்ஸ்டிடியூட்நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அந்த டைப் ரைட்டிங்இன்ஸ்டிடியூட்டுக்குவரும் சிறுமிகள், பள்ளி மாணவிகள், திருமணம் ஆனவர்கள் எனப் பலரிடம் டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுப்பது போல்பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அவர்களின் அங்கங்களைத்தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்து ரசித்து வந்ததாகத்திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு புகார் வந்தது.
அதனைத்தொடர்ந்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி இந்தசம்பவம் குறித்து போக்சோசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)