/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbil-mahesh-std_0.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், சாந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன்-அம்பிகா தம்பதியர். இவர்களது இரண்டாவது மகளான 15 வயது சிறுமி வயது 15 தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தாய் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாணியம்பாடி பகுதியில் இரண்டாவது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாய் தந்தை இல்லாமல் தனது பாட்டி வளர்ப்பில் அரசுப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடைக்குச் சென்று வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த 62 வயது முதியவரான சேகர் என்பவர் அவ்வப்போது மாணவியை அழைத்து கடையில் சில பொருட்களை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். மேலும், அவர் கொடுத்த பணத்தில் மீதியான பணத்தைச் சிறுமியை எடுத்துக் கொள் என்று ஆசை வார்த்தைகள் எல்லாம் கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.
இதனை வீட்டிற்குப் பயந்து தனது பாட்டியிடமும் சொல்லாமல் சிறுமி மறைத்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு நேற்று வயிற்று வலி காரணமாக அவரது பாட்டி மின்னூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார் மேலும் பள்ளி மாணவியை மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாகப் பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் முதியவர் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு கைதுசெய்தனர். இதனைத் தொடர்ந்து, அவரை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
தாய் தந்தை இல்லாமல் பாட்டி வளர்ப்பில் வளர்ந்து படித்து வந்த பள்ளி மாணவியை பணத்தைக் காட்டி, ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)