Advertisment

பனிமூட்டத்தால் நடந்த விபரீதம்; முதியவர் பலி, மனைவி படுகாயம்!

 old man was lost and Wife injured when a accident near Modakurichi

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குருசாமி(73). இவரது மனைவி சரஸ்வதி(72). இவர்களுக்கு பெரியசாமி(50) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.11.2024) காலை குருசாமி தனது மனைவி சரஸ்வதியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து கிளம்பி மொடக்குறிச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வண்டியை குருசாமி ஓட்ட பின்னால் சரஸ்வதி அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.

Advertisment

ஈரோடு - முத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அய்யகவுண்டன் பாளையம் அருகே செல்லும்போது சாலையில் பனி மூட்டமாக இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. குமாரசாமி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நஞ்சை ஊத்துக்குளி தனியார் தீவன ஆலைக்கு சொந்தமான வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த குருசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மனைவி சரஸ்வதிக்கு காலில் காயம் ஏற்பட்டது.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரசாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த சரஸ்வதியை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe