Advertisment

வயசானாலும் கெத்து குறையாத தாத்தா... வைரலாகும் வீடியோ!

தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில் உலகில் நடக்கும் விநோதமான செயல்கள் அனைத்தும் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தாத்தா ஒருவர் மிதிவண்டியில் தலையில் கரும்பு வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வயதான தாத்தா ஒருவர் பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு கரும்பு வாங்கியுள்ளார்.

Advertisment

ஆனால் அதனை மிதிவண்டியில் எடுத்து செல்லாமல் தலையில் வைத்துக்கொண்டு எந்த பிடிமானமும் இன்றி சாலையில் விரைவாக சென்றுள்ளார். வயதான காலத்திலும் இவர் இளைஞரை போல் கெத்தாக செல்கிறார் என்று நெட்டிசன்கள் இணையதளங்களில் அவரை பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

VIRAL PHOTO
இதையும் படியுங்கள்
Subscribe