திருச்சி ராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது மகனான பிரபாகரன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நரம்பு சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று இரவு எலியை பிடிக்க பயன்படும் எலி பேஸ்டை தேநீரில் கலந்து குடித்துள்ளார். இதனை அறிந்த அவரது மகன் பிரபாகரன், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
ஆனால், முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், அவர் ஏற்கனவே இரண்டு முறை இதே போல் தற்கொலைக்கு முயன்றவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.